தமிழ்நாடு

அண்ணாமலை பாதயாத்திரை 3-ந்தேதி தொடக்கம்: நிர்மலா சீதாராமன் 6-ந்தேதி சங்கரன்கோவிலில் பங்கேற்கிறார்

Published On 2023-08-24 05:12 GMT   |   Update On 2023-08-24 05:12 GMT
  • பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் அவர்கள் பிரச்சினைகளை கேட்டறியவும் முடிவு செய்துள்ளார்கள்.
  • 36 தொகுதிகளில் பாதயாத்திரை செல்லும் அண்ணாமலை 27-ந்தேதி கோவையில் நிறைவு செய்கிறார்.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை செல்கிறார்.

ராமேசுவரத்தில் கடந்த மாதம் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 41 சட்ட மன்ற தொகுதிகளில் பாத யாத்திரை சென்றார். கடந்த 22-ந்தேதி நெல்லையில் முதற்கட்ட பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

2-ம் கட்ட பாதயாத்திரை அடுத்தமாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி தொடங்குகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங் கும் அண்ணாமலை அன்று இரவு தென்காசியில் நிறைவு செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து வாசுதேவ நல்லூர், கடையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக 6-ந்தேதி சங்கரன் கோவில் செல்கிறார்.

சங்கரன் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாதயாத்திரையில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

பின்னர் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம், கம்பம், போடி ஆகிய பகுதிகள் வழியாக 36 தொகுதிகளில் பாதயாத்திரை செல்லும் அண்ணாமலை 27-ந்தேதி கோவையில் நிறைவு செய்கிறார்.

இந்த 2-ம் கட்ட பாத யாத்திரை செல்லும் பகுதிகள் விவசாயிகள், நெசவாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. எனவே இந்த பகுதிகளில் பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவும் அவர்கள் பிரச்சினைகளை கேட்டறியவும் முடிவு செய்துள்ளார்கள்.

Tags:    

Similar News