தமிழ்நாடு

நடிகை அம்பிகா

மாணவிக்கு ஆட்டோ ஓட்டுனர் பாலியல் தொல்லை- துணிந்து புகார் கொடுத்த பெண்ணுக்கு நடிகை அம்பிகா பாராட்டு

Update: 2022-09-27 08:17 GMT
  • தனியாக விடுதிக்கு செல்லும்போது, ஆட்டோ ஓட்டுனர் செல்வம் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.
  • காவல் ஆணையர் அலுவலகம் டுவிட்டர் பக்கத்தில் ஆட்டோ ஓட்டுனர் செல்வத்தை தேடி வருவதாக பதிவிடப்பட்டிருக்கிறது.

சென்னை:

இஷிதா சிங் என்ற பெண் சென்னையில் தங்கி இதழியல் படித்து வருகிறார். இவர் நேற்று தனது தோழியுடன் பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் தனது விடுதிக்கு ஆட்டோ ஒன்றில் திரும்பியிருக்கிறார். தனது தோழியை இறக்கிவிட்டு தனியாக விடுதிக்கு செல்லும்போது, ஆட்டோ ஓட்டுனர் செல்வம் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பித்த அந்தப்பெண் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவர் தங்கியிருக்கும் பெண்கள் விடுதிக்கு ஆண் காவலர் ஒருவர் வந்து விசாரித்ததாகவும், செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க விடாமல் தடுக்க முயற்சித்ததாகவும், மனுவை எழுதி வாங்கிக்கொண்டு தன்னை அனுப்பி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இவர் புகார் கொடுத்ததோடு அதை டுவிட்டர் மூலம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் கவனப்படுத்தியிருந்தார். இதனால் தற்போது காவல் ஆணையர் அலுவலகம் டுவிட்டர் பக்கத்தில் ஆட்டோ ஓட்டுனர் செல்வத்தை தேடி வருவதாக பதிவிடப்பட்டிருக்கிறது.

இஷிதா சிங்கின் இந்த விடாமுயற்சிக்கு நடிகை அம்பிகா பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Tags:    

Similar News