தமிழ்நாடு

கொடுமுடி அருகே தனியார் பஸ்சை வழிமறித்து ரகளை செய்த கண்டக்டர்

Published On 2023-06-28 05:15 GMT   |   Update On 2023-06-28 05:15 GMT
  • குடிபோதையில் அங்கு வந்த கார்த்திக் தனியார் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
  • கார்த்திக்கை கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

கொடுமுடி:

கரூர் மாவட்டம் மராபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஈரோட்டில் இருந்து கரூர் வரை செல்லும் தனியார் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும், பஸ் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டத்தில் பஸ் கண்டக்டர் பணியில் இருந்து விலகி கொண்டார் கார்த்திக்.

இவர் பணிக்கு சேரும்போது தனது கண்டக்டர் உரிமை அட்டையை தனியார் பஸ் உரிமையாளரிடம் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். பணியில் இருந்து நின்றவுடன் தனது கண்டக்டர் உரிமை அட்டையை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு பஸ் உரிமையாளர் கொடுக்க மறத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஊஞ்சலூர் அருகே மணிமுத்தூர் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது குடிபோதையில் அங்கு வந்த கார்த்திக் தனியார் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட கார்த்திக்கை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

பின்னர் கார்த்திக்கை கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Tags:    

Similar News