தமிழ்நாடு

தரம் குறைந்த உணவகங்களில் பஸ் நிறுத்தப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்- தமிழக போக்குவரத்து துறை அறிக்கை

Published On 2023-07-10 08:36 GMT   |   Update On 2023-07-10 08:36 GMT
  • சாலையோர பயணவழி உணவகங்களில் அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
  • உணவகத்தின் பெயருடன் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.

சென்னை:

பயணவழி உணவகங்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும் என பயணிகளை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது:-

திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட சாலையோர பயணவழி உணவகங்களில் அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் உணவின் தரம், கழிப்பறை வசதி, பராமரிப்பு போன்றவை குறித்து அவ்வப்போது பயணிகளிடம் இருந்து வரும் புகார்களின் அடிப்படையில் போக்குவரத் துக்கழக அலுவலர்கள் உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய உணவக உரிமையாளர்களை அறிவுறுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை மேம்படுத்தும் வகையில் உணவகங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க முன்பதிவு செய்யும் பயணிகளின் கைப்பேசிக்கு லிங்க் ஒன்று பயணத்தின் முன்பாக அனுப்பப்படும். இந்த இணைப்பில் பயணிகள் உணவகங்களில் உள்ள குறை, நிறைகளைப் பதிவிட்டு அனுப்ப வழிவகை செய்யப் பட்டுள்ளது.

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியில் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வரப்பெறுகின்றன. ஆனால் தெளிவாக இல்லை. வரும் காலங்களில் உணவகங்கள் எந்த முறையில் விதிமீறவில் ஈடுபடுகின்றன என்பதை தெளிவாக உணவகத்தின் பெயருடன் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News