தமிழ்நாடு

கேக் தயாரிப்பில் ஈடுபட்ட சமையல் கலைஞர்களை காணலாம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலர் திராட்சை, உயர்ரக மதுபானம் கொண்டு 80 கிலோ கேக்

Published On 2022-11-23 06:25 GMT   |   Update On 2022-11-23 06:25 GMT
  • கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.
  • 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

கொடைக்கானல்:

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் மதுபான வகைகளை கொண்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவது வழக்கம்.

அதனடிப்படையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கிறிஸ்துமஸ் பழம், அத்திப்பழம் உள்ளிட்ட 15 வகையான பழங்கள் மற்றும் 5 வகையான உயர்ரக மதுபானங்களில் இருந்து 8 லிட்டர் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இந்த கலவை 30 நாட்களுக்கு பதப்படுத்தி வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மேலும் சில மாவு சேர்த்து 80 கிலோ பிளம் கேக் தயாரிக்கப்பட உள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர். இந்த கேக்குகள் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக பாடல்கள் பாடி உற்சாகம் அடைந்தனர்.

கேக் தயாரிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு வகை உலர் பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் காட்சிபடுத்தப்பட்டு அவை ஒவ்வொன்றின் தனித்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சமையல் கலைஞர்கள் மட்டுமின்றி இதில் பங்கேற்றவர்கள் தங்கள் வீடுகளிலும் இதேபோன்ற கேக்கை தயாரிக்க முடியும் என்றும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Tags:    

Similar News