தமிழ்நாடு செய்திகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மீட்பு பணிக்காக தயார் நிலையில் இருக்கும் படகு

குமரியில் 11 இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் 553 பேர் தங்க வைப்பு

Published On 2023-12-18 11:08 IST   |   Update On 2023-12-18 11:08:00 IST
  • இரவின் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 53 பேரும், கோட்டை விளை அரசு நடுநிலைப்பள்ளியில் 21 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • மாவட்டம் முழுவதும் 212 ஆண்களும், 273 பெண்களும், 67 குழந்தைகள் ஒரு திருநங்கை என 553 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகர பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். படகு மூலமாக பலரும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் 20 பேரும், தோப்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் 4 பேரும், கன்னியாகுமரி பேரிடர் நிவாரண மையத்தில் 146 பேரும், இரவின் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 53 பேரும், கோட்டை விளை அரசு நடுநிலைப்பள்ளியில் 21 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தோவாளை கிருஷ்ணசாமி மண்டபத்தில் 213 பேரும், திருப்பதிசாரம் தனியார் பள்ளி ஒன்றில் 35 பேரும், ஏழுதேசம் பற்று அரசு உயர்நிலைப்பள்ளியில் 11 பேரும், விளவங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 15 பேரும், ஏழுதேசம் பேரிடர் பாதுகாப்பு மையத்தில் 5 பேரும், சுசீந்திரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 30 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 212 ஆண்களும், 273 பெண்களும், 67 குழந்தைகள் ஒரு திருநங்கை என 553 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News