தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 33 ஏரிகள் நிரம்பின

Published On 2022-12-10 13:02 IST   |   Update On 2022-12-10 13:02:00 IST
  • கடந்த வாரம் 315 ஏரிகள் நிரம்பி இருந்த சூழ்நிலையில் தற்போது 353 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் காரணமாக ஒரே நாளில் மட்டும் 33 ஏரிகள் நிரம்பி உள்ளன.

காஞ்சிபுரம்:

ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 919 ஏரிகள் இருக்கிறது. கடந்த வாரம் 315 ஏரிகள் நிரம்பி இருந்த சூழ்நிலையில் தற்போது 353 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் காரணமாக ஒரே நாளில் மட்டும் 33 ஏரிகள் நிரம்பி உள்ளன. 262 ஏரிகளில் 75 சதவீதமும், 242 ஏரிகளில் 50 சதவீதமும், 51 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் உள்ளது.

Tags:    

Similar News