தமிழ்நாடு செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
நூதனமான முறையில் கடத்தல்... சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்
- தங்கத்தை கம்பிபோல் மாற்றி அதை சூட்கேசுக்குள் வைத்து தைத்து கடத்தி வந்துள்ளனர்
- இந்த கடத்தல் தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
மஸ்கட்டில் இருந்து இன்று சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் லெதர் சூட்கேஸ் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அதனை பிரித்து சோதனையிட்டனர். அப்போது, தங்கத்தை கம்பிபோல் மாற்றி அதை சூட்கேசுக்குள் வைத்து தைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1.33 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.