தமிழ்நாடு

2-வது சீசன் களைகட்டியது: ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 4 நாளில் 80 ஆயிரம் பேர் வருகை

Published On 2023-10-03 05:44 GMT   |   Update On 2023-10-03 05:44 GMT
  • ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு இரண்டாவது சீசன் நடந்து வருகிறது.
  • மலைப்பாதைகளில் கவனமுடன் வாகனங்களை இயக்க, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இங்குள்ள இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகையில் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகிறது. பல ஆயிரம் மலர்கள் மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக, தொடர் விடுமுறை என்பதால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, 29-ந் தேதி முதல், நேற்று 2-ந் தேதி வரையிலான 4 நாட்களில், 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

அவர்கள், 10 ஆயிரம் மலர் தொட்டியில் வடிவமைக்கப்பட்ட 'சந்திராயன்-3' விண்கலம், மாடங்களில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, செல்பி, போட்டோ எடுத்தனர். பயணிகள் கூட்டம் அதிகரிப்பால், ஊட்டி, குன்னூர் மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மலைப்பாதைகளில் கவனமுடன் வாகனங்களை இயக்க, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News