தமிழ்நாடு

சென்னையில் இருந்து புறப்படும் 29 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ரத்து

Published On 2023-12-06 07:21 GMT   |   Update On 2023-12-06 07:21 GMT
  • வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது.
  • சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

சென்னை:

தண்டவாளத்தில் வெள்ளம் வடியாததால் சென்னை சென்ட்ரலில் இருந்து 3-வது நாளாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. மின்சார ரெயில்கள் நேற்று மாலையில் இருந்து இயக்கப்படுகின்றன. பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது.

எழும்பூர்-தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் பெரம்பூர் வழியாக கடற்கரை நிலையம் மூலம் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்க ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

வியாசர்பாடி, பேசின் பாலம், யானைக்கவுனி பகுதியில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகுதான் சென்ட்ரலில் இருந்து முழுமையாக ரெயில்கள் இயக்கப்படும். நாளை முதல் போக்குவரத்து சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லக்கூடிய 29 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சென்ட்ரல்-மைசூரு வந்த பாரத் ரெயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டன.

திருப்பதி சப்தகிரி, திருப்பதி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும், சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ் இரு மார்க்கமும்,

பெங்களூரு-சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சோவை-சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்ட்ரல் வந்தே பாரத், கோவை-சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தவிர மேலும் 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதே போல சில ரெயில்கள் மாற்று பாதையிலும், சில ரெயில்கள் வேறு நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News