தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று 2.17 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

Published On 2024-01-13 01:59 GMT   |   Update On 2024-01-13 01:59 GMT
  • நேற்று நள்ளிரவு வரை 3,946 பேருந்துகளில் 2,17,030 பேர் பயணம்.
  • இதுவரை சொந்த ஊர் பயணம் செய்ய 1,96,310 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. பெங்கலுக்கு முந்தைய இரண்டு தினங்களான இன்றும் நாளையும் சனி மற்றும் ஞாயிறு என்பதால் நேற்றே (வெள்ளிகிழமை) பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர் புறப்பட்டனர்.

முன்னதாகவே முன்பதிவு செய்த பயணிகள் சிரமமின்றி அவர்களுடைய ஊருக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும் இடத்திற்கு சென்று புறப்பட்டனர். சிறப்பு பேருந்துகளில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்து புறப்பட்டனர்.

முன்பதிவு செய்த மக்களுடன், முன்பதிவு செய்யாத மக்கள் அதிக அளவில் பேருந்து நிலையத்தில் கூடினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் விடப்பட்டன.

சென்னையில் இருந்து அதிக அளவில் பேருந்து புறப்பட்டுச் சென்றதால் சென்னை- திருச்சி ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் ஊர்ந்த வண்ணம் சென்றன.

நேற்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் 1260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,946 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெிவித்துள்ளது.

இன்றும் அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News