தமிழ்நாடு செய்திகள்
சைக்கிள் பேரணி (கோப்பு படம்)

மண் வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஜூன் 5-ம் தேதி சென்னையில் நடக்கிறது

Published On 2022-06-03 11:38 IST   |   Update On 2022-06-03 11:38:00 IST
மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து தொடங்கும் சைக்கிள் பேரணி, சுமார் 55 கி.மீ தொலைவில் செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெறும்.
சென்னை:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னையில் ஜூன் 5-ம் தேதி நடக்க உள்ளது.

இந்த சைக்கிள் பயணம் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக பாப் (BOB)அமைப்பு சார்பில் நடத்தப்படுகிறது. மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து அன்றைய தினம் காலை 5 மணிக்கு தொடங்கும் இப்பயணம் அங்கிருந்து சுமார் 55 கி.மீ தொலைவில் செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெறும்.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 98842 55712 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயணம் குறித்த விளக்க நிகழ்ச்சி ஹோட்டல் சவேராவில் ஜூன் 3-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது நேரடி முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும், ஐ.நாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், சர்வதேச விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பல தரப்பினர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட சத்குரு, 100 நாட்களில் 30,000 கி.மீ. தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சத்குரு மே 29-ம் தேதி முதல் இந்தியாவில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.
Tags:    

Similar News