தமிழ்நாடு செய்திகள்
வரட்டுப்பள்ளம் அணை

வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது

Published On 2022-05-31 09:30 IST   |   Update On 2022-05-31 09:40:00 IST
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு:

அந்தியூர் அருகே பர்கூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 33.46 அடியாகும். பர்கூர் மேற்கு மலைப்பகுதியில் மழை பெய்யும்போது கும்பரவாணி பள்ளம், கள்ளுப்பள்ளம், வரட்டுப்பள்ளம் ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்து சேரும்.

கடந்த 15 நாட்களாக பர்கூர் மேற்கு மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 3 ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் நேற்று காலை வரட்டுப்பள்ளம் அணை தன் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டியது. இதனால் அணை நிரம்பி வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேறுகிறது. இந்த தண்ணீர் அந்தியூர் கெட்டி சமுத்திரம் ஏரிக்கு செல்கிறது.

Tags:    

Similar News