தமிழ்நாடு
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு

Update: 2022-05-23 06:07 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,648-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. கடந்த வாரம் 16-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.37,824-க்கு விற்றது.

மறுநாள் 17-ந்தேதி அது 38 ஆயிரத்தை தாண்டியது. 18-ந்தேதி மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. 19-ந்தேதி மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டி ரூ.38,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

20-ந்தேதி ரூ.38,344-க்கும், 21-ந்தேதி ரூ.38,536-க்கும் விற்கப்பட்டது. நேற்றும் அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.

இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38,648-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,817-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,831-க்கு விற்கப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.66.10-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.66,100-க்கு விற்பனையாகிறது.
Tags:    

Similar News