தமிழ்நாடு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாஞ்சில் சம்பத் பங்கேற்பு

Published On 2022-05-20 08:47 GMT   |   Update On 2022-05-20 08:47 GMT
முத்தமிழறிஞர் கலைஞர் 2008ம் ஆண்டு கொண்டுவந்த வரும்முன் காப்போம் திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக மூடுவிழா நடத்திவிட்டனர்.

திருவான்மியூர்:

சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி தி. மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் பகுதி செயலாளர் துரை கபிலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், சிங்கை சௌந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

முத்தமிழறிஞர் கலைஞர் 2008ம் ஆண்டு கொண்டுவந்த வரும்முன் காப்போம் திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக மூடுவிழா நடத்திவிட்டனர். மீண்டும் தமிழக முதல்வர் அந்த திட்டத்தை கொண்டுவந்து 1560 முகாம்களை நடத்தி 9 லட்சத்து 6 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.

தொலைதூர மருத்துவமனை திட்டம் ஒவ்வொரு கிராமத்திற்கும் கடைக்கோடி தமிழனுக்கும் பயனளிக்கும் திட்டம். இந்த மருத்துவ சேவை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சாதனை புரிந்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

501 தேர்தல் வாக்குறுதிகளில் 454வது வாக்குறுதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வேன் என்று முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

மாநில அரசுகள் மீது அத்துமீறும் அதிகாரம் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது.

தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பேரறி வாளன் விடுதலைக்கு தமிழக முதல்வர் தேர்ந்தெடுத்த வழக்கறிஞர்கள் நியாயத்தின் கதவுகள் வழியாக பேரறிவாளன் விடுதலைக்கு வித்திட்டனர்.

இந்திய துணை கண்டத்தில் ஒரு திருப்புமுனை தீர்ப்பை தமிழக முதல்வர் பெற்றுத்தந்துள்ளார்.

நூறாண்டுகால தமிழக பண்பாட்டு அரசியல் வரலாற்றில் ஓராண்டு காலத்தில் தமிழக முதல்-அமைச்சர் இந்திய துணை கண்டத்தில் இதுவரை இருந்த எந்த முதல்-அமைச்சரும் சாதிக்காத சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, தலைமை சட்ட திருத்த குழு செயலாளர் பாலவாக்கம் சோமு, மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், மண்டல குழு தலைவர்கள் இரா.துரைராஜ், எஸ்.வி.ரவிச்சந்திரன், மதியழகன், பகுதி செயலாளர்கள் சு.சேகர், கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் வேளச்சேரி மணிமாறன், தனசேகர், கண்ணன், மு.ராசா, மாவட்ட தலைவர் குணசேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கரன், ராஜாரமணன், எஸ்.ஜெயக்குமார், பாண்டியன், வழக்கறிஞர்கள் சந்தானம், தமிழரசு, விநாயகமூர்த்தி, பாலசுந்தரம், பரிமேலழகன், அடையாறு பாஸ்கர், அருணா, வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News