தமிழ்நாடு
திருமாவளவன்

நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் பணி தேர்வை ரத்துச் செய்ய வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்

Published On 2022-04-29 19:46 GMT   |   Update On 2022-04-29 19:46 GMT
தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தில் தமிழர் ஒருவருக்கும் வேலை வாய்ப்பில்லை என்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட தூரோகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் GETஎன்னும் பட்டதாரி  பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 300 பேரில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சார்ந்தவரில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 

விண்ணப்பம் செய்வதற்கே வாய்ப்புக் கிட்டாத வகையில் அறிவிப்புச்  செய்ததை ரத்து செய்யக்கோரி CMD அவர்களுக்கு கடந்த 11 ஆம்  தேதி கடிதம் எழுதினேன். 

மனித வளத்துகான பொறுப்பு இயக்குநரிடம் தொலைபேசியில் வலியுறுத்தினோம்.  ஆனால் தேர்வை நடத்தி  முடித்தனர். எதிர்பார்த்ததைப் போல தேர்வானவர்களில் ஒருவரும்  தமிழர் இல்லை.  

இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென இந்திய அரசுக்கு  வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தில் தமிழர் ஒருவருக்கும் வேலை வாய்ப்பில்லை என்பது தமிழக  மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். 

எனவே இத்தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் முறைப்படி அறிவித்து தேர்வை நடத்தி  தமிழர்களை பணியிலமர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News