தமிழ்நாடு
குடியாத்தம் சைனகுண்ட சோதனைசாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் காட்சி.

குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் மீண்டும் கொரோனா பரிசோதனை

Published On 2022-04-25 05:35 GMT   |   Update On 2022-04-25 05:35 GMT
தமிழக எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறை சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியாத்தம்:

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் முதல் கட்டமாக தமிழக எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறை சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பானுமதி உத்தரவின் பேரில் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் ஆந்திர மாநில எல்லை பகுதி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் மேற்பார்வையில் மருத்துவர் தயாளன், சுகாதார ஆய்வாளர் கபாலீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் மற்றும் பணியாளர்கள் ஆந்திரா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சைனகுண்டா சோதனைச்சாவடி தாண்டி குடியாத்தம் வரும் வாகனங்களை நிறுத்தி அதில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறவுறுத்தினர். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
Tags:    

Similar News