தமிழ்நாடு செய்திகள்
திடீரென ஏற்பட்ட பள்ளம்.

விருதுநகரில் காலி மனையில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளம்- வருவாய்த்துறையினர் ஆய்வு

Published On 2022-04-23 10:45 IST   |   Update On 2022-04-23 10:45:00 IST
விருதுநகரில் காலி மனையின் ஒரு பகுதியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்:

விருதுநகர் புல்லலக்கோட்டையை சேர்ந்தவர் வைரவன். இவருக்கு சொந்தமான காலி இடத்தின் அருகே வீடு கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் காலி மனையின் ஒரு பகுதியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கேள்விப்பட்ட பலரும் அங்கு வந்து பள்ளத்தை பார்த்து வியந்தனர். 1½ அடி அகலத்தில் 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளம் எப்படி நடந்தது? என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து புல்லலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகுமார் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இந்த பள்ளம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News