தமிழ்நாடு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

ஒரு வார பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை நீலகிரி வருகை

Published On 2022-04-22 05:02 GMT   |   Update On 2022-04-22 05:02 GMT
அடுத்த மாதம் 3-ந்தேதி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு கவர்னர் வருகை தர உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம் வழியாக காரில் நீலகிரி செல்கிறார்.

நீலகிரிக்கு செல்லும் அவர் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். நாளை முதல் வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் ஊட்டியிலேயே கவர்னர் தங்குகிறார்.

25-ந் தேதி காலை ராஜ்பவன் மாளிகையில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற 29-ந் தேதி வரை நீலகிரியில் தங்கியிருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி 30-ந் தேதி சென்னை திரும்புகிறார். பின்னர் அடுத்த மாதம் 3-ந் தேதி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு கவர்னர் வருகை தர உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News