தமிழ்நாடு
ஜி.கே.வாசன்

சொத்து வரி உயர்வை எதிர்த்து ஜி.கே.வாசன் 22-ந்தேதி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-20 05:35 GMT   |   Update On 2022-04-20 05:35 GMT
வரி உயர்வு நாட்டின் முன்னேற்றதிற்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு இருக்க வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு சொத்துவரியை 150 சதவிகிதம் உயர்த்தியது. கொரானாவின் தாக்கத்தில் இருந்து மீண்டுவரும் மக்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.

வரி உயர்வு நாட்டின் முன்னேற்றதிற்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு இருக்க வேண்டும். பாமரர் முதல் செல்வந்தவர் வரை கொரோனாவின் தாக்கத்தால் பொருளாதார இழப்பில் இருந்து மீண்டெழும் முன்னரே சொத்துவரி உயர்வை அறிவித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது தமிழக அரசு.

மக்களை சிரமதிற்குள்ளாக்கும் இந்த சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நாகர்கோவிலில் அமைந்துள்ள, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக எனது தலைமையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மாவட்ட த.மா.கா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க நண்பர்களும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News