தமிழ்நாடு செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓடிய காட்சி

நொய்டாவில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் 135-வது மாரத்தான் ஓடினார்

Published On 2022-04-03 14:31 IST   |   Update On 2022-04-03 14:31:00 IST
டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் இன்று மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டு ஓடினார்.

சென்னை:

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓடுவதில் ஆர்வம் மிகுந்தவர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சென்று மாரத்தான் ஓட்டங்களில் கலந்து பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். ஏற்கனவே 134 மாரத்தான் ஓட்டங்களை ஓடி முடித்துள்ளார்.

மந்திய சுகாதார மந்திரி மன்சுர்மாண்டவியாவை சந்திக்க டெல்லி சென்ற மா.சுப்பிரமணியன் நேற்று அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்றார். இன்று மாலையில் சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில் டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் இன்று மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டு ஓடினார்.

இன்று தனது 135-வது மாரத்தான் ஓட்டத்தை ஓடி நிறைவு செய்தார். இதுவரை இந்திய அளவில் யாரும் செய்யாத சாதனை இது ஆகும்.

அங்குள்ள ஜெ.பி. ஆஸ்பத்திரி அருகில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 21.1 கி.மீடர் தூரம் நடந்தது.

Similar News