தமிழ்நாடு செய்திகள்
வேலூர் சத்துவாச்சாரியில் பிஸ்கெட் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, பணம் கொள்ளை
வேலூர் சத்துவாச்சாரியில் பிஸ்கெட் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கானாறு தெருவை சேர்ந்தவர் மாணிக்கவேல் (வயது 57). இவரது வீட்டின் பின்பக்கமாக பிஸ்கெட் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன், 2 மகள்கள் உள்ளனர்.
மாணிக்கவேல் தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் காரில் கும்பகோணத்தில் உள்ள திருமஞ்சேரி கோவிலுக்கு சென்றார். நேற்று காலை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு 9 மணியளவில் மாணிக்கவேல் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மாணிக்கவேல் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அறைகளில் ஆங்காங்கே துணிகள், பொருட்கள் சிதறிக்கிடந்தன.
பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இது குறித்து அவர் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன்பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் மாணிக்கவேல் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணிக்கவேலின் குடும்ப நிகழ்வுகளை நன்கு அறிந்த மர்ம கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகை மாதிரிகளை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் வீட்டினுள் மோப்பம் பிடித்தது. அந்தத் தெருவில் சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
பின்னர் போலீசார் அந்த தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமராவில் அந்தத்தெருவில் நள்ளிரவில் பைக்கில் கொள்ளையர்கள் வந்தது தெரியவந்ததுள்ளது. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது. அவர்கள் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 3 பேர் கும்பல் பணத்தை திருடி சென்றனர்.
அதில் ஈடுபட்ட 3 பேரும் சிறுவர்கள் தான். அந்த கும்பலுக்கு இதில் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.