தமிழ்நாடு செய்திகள்
வேலூர் உள்பட 4 மாவட்டத்தில் 75 சதவீத பஸ்கள் ஓடவில்லை
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் 3 ஆயிரம் பேரில் 1,300 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 614 பஸ்களில் 100-க்கும் குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மொத்தமாக 75 சதவீதத்துக்கு மேல் பஸ்கள் ஓட வில்லை என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன.
அதிகளவில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இன்று காலை 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை.
இதேபோல அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் 3 ஆயிரம் பேரில் 1,300 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.