தமிழ்நாடு செய்திகள்
ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-26 16:14 IST   |   Update On 2022-03-26 16:14:00 IST
கடலூரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:

கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை குறைத்திட கோரியும் , எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல், வங்கி, ரெயில்வே தனியார் மயமாவதை கண்டித்தும், கடலூர் புதுச்சேரி ரெயில்பாதை திட்டம் வராமல் தடுப்பதை கண்டித்தும், சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் கடலூர் மாநகராட்சியில் ஒரு மருத்துவ கல்லூரி அமைத்திட கோரியும், கடலூரில் மருத்துவ கல்லூரி அரசு பெண்கள் கல்லூரி ஆண்கள், மகளிர் பாலிடெக்னிக் , சட்டக்கல்லூரி, நவோதையா பள்ளி அமைத்திட கோரியும் வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை ஆதரித்தும் ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணைபொதுச்செயலாளர் புருஷோதமன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு செயலாளர் கருப்பையன் பேசினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் கண்ணபிரான், மாயவேல் கோபால், லட்சுமிநாராயணன், காசிநாதன், ரமணி , கல்யாணகுமார், ராதாகிருஷ்ணன், சரவணன் செல்வகணபதி, பன்னீர்செல்வம், இளங்கோவன், ரெங்கநாதன், செல்வராஜ், மோகன், கண்ணன், நடராஜன், திருநாவுக்கரசு, குணசேகரன், ராஜேந்திரன் , ஆறுமுகம், பாலுபச்சையப்பன், நாகலிங்கம், சண்முகம், கோமதிநாயகம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். வேலூர் கோட்ட இணைசெயலாளர் வைத்தியலிங்கம் நிறைவுரை ஆற்றினார். முடிவில் பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.

Similar News