தமிழ்நாடு
கடும் பனி மூட்டம்

தாம்பரம் பகுதியில் கடும் பனி மூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-03-11 06:30 GMT   |   Update On 2022-03-11 06:30 GMT
படப்பை பகுதியில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் படர்ந்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
தாம்பரம்:

தமிழகத்தில் பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர் மற்றும் பனி மூட்டம் இருக்கும். இதன் பின்னர் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்.

கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் மிதமாக குளிர் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.

படப்பை பகுதியில் சாலையே தெரியாத அளவுக்கு புகை போல் பனி மூட்டம் இருந்தது. ஆனால் பெரிய அளவில் குளிர் இல்லை. இதனை பொதுமக்கள் வித்தியாசமாக உணர்ந்தனர்.

படப்பை பகுதியில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் படர்ந்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மெதுவாக வாகனங்களை இயக்கி சென்றனர்.

இதே போல் ஒரகடம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பகுதிகளிலும் அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.

Tags:    

Similar News