தமிழ்நாடு செய்திகள்
பாஜக

சங்கராபுரம் பேரூராட்சியில் ஒரே ஒரு வாக்கு பெற்ற பா.ஜனதா

Published On 2022-02-23 09:47 IST   |   Update On 2022-02-23 09:47:00 IST
சங்கராபுரம் பேரூராட்சியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 9 ஆயிரத்து 853 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட 3வது வார்டு வேட்பாளர் இம்தியாஸ், 10-வது வார்டு சாபிரூன்நிஷா, 12-வது வார்டு சுதா, 13-வது வார்டு ரோஜாமணி ஆகிய 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள 11 வார்டுகளில் தி.மு.க., அ.திமு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மற்றும் பல கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 43 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 7 ஆயிரத்து 549 வாக்குள் பதிவானது. இதில் 1-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., மற்றும் சுயேச்சை என 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த வார்டில் மொத்தமுள்ள 634 வாக்குகளில் 513 வாக்குகள் பதிவானது. இதில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

Similar News