தமிழ்நாடு
திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த குளம்

திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த குளத்தை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

Published On 2022-02-21 07:14 GMT   |   Update On 2022-02-21 07:14 GMT
திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த குளத்தில் படர்ந்திருந்த பாசி, செடிகளை அகற்றும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சங்குதீர்த்த குளம் கோவில் அருகே உள்ளது.

726 அடி நீளமும், 546அடி அகலமும் கொண்ட சுமார் 12 ஏக்கரில் உள்ளது. 3 ஆயிரத்து 400 லட்சம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்டது.

12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் சங்கு பிறப்பது அதிசயம். இக்குளத்தில் குளித்தால் காசி, கங்கை, ராமேஸ்வரம் கடலில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஆன்மீக பக்தர்களின் நம்பிக்கை.

இந்த குளம் மாசுபட்டு பாசி படர்ந்து கிடக்கிறது. இதனை கண்ட பக்தர்கள் குளத்தில் படர்ந்திருந்த பாசி-செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் லாரி டியூப் மூலமாக நடுக்குளத்திற்கு சென்று அதனை அகற்றி வருகிறார்கள்.

Tags:    

Similar News