தமிழ்நாடு செய்திகள்
வாக்குவாதம்

கள்ள ஓட்டு போடுவதாக குற்றச்சாட்டு: திமுக-அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

Published On 2022-02-19 16:57 IST   |   Update On 2022-02-19 16:57:00 IST
புதுக்கோட்டை நகராட்சி 18வார்டு பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக, மற்ற வாக்காளர்களிடம் சிறிதுநேரம் லெட்ஜரில் கையெழுத்து வாங்குவதற்கு பதில் கைரேகை மட்டுமே பெற்றனர்.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகளில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி 18வார்டு பகுதியில், கள்ள ஓட்டு போடப்படுவதாக எழுந்த புகாரையடுத்து திமுக அதிமுகவினர் இடையே வக்குச்சாவடி அறைக்குள் கடும் வாக்குவாதம்  ஏற்பட்டது.

18வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் அரசு ஊழியர்கள் 3 பேர் ஓட்டு போட வந்தனர். அங்கு வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், வாக்குச்சாவடி அறைக்குள்  திமுக- அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, மற்ற வாக்காளர்களிடம் லெட்ஜரில் கையெழுத்து வாங்காமல் கைரேகை மட்டுமே பெற்றனர்.

பின்னர் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வாக்குச்சாவடிக்குள் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் போலீசார் வெளியேற்றினர். இதனால்  சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

Similar News