தமிழ்நாடு செய்திகள்
வண்டலூர் பூங்காவில் செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

17 நாட்களுக்கு பிறகு வண்டலூர் பூங்கா இன்று மீண்டும் திறப்பு

Published On 2022-02-03 13:37 IST   |   Update On 2022-02-03 13:37:00 IST
17 நாட்களுக்குப் பின்பு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.
தாம்பரம்:

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து விலங்குகளின் பாதுகாப்பை கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 31ந் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது.

மேலும் பூங்காவில் உள்ள 17 வயது ஆன சிறுத்தை ஒன்று உடல்நலக்குறைவால் இறந்தது. இதைத்தொடர்ந்து பூங்காவில் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்பட 21 பூனை இனங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 11 சிங்கங்கள், 6 புலிகள், 4 சிறுத்தைகள் ஆகிய விலங்குகளுக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து வண்டலூர் பூங்கா இன்று (3-ந்தேதி) முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உடல்வெப்ப பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் பின்னரே சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பார்வையாளர்கள் திறந்த வெளியில் உள்ள விலங்குகளை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். காணவே அனுமதிக்கப்பட்டனர். உள் அரங்கில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைக் காண அனுமதி மறுக்கப்பட்டது. 17 நாட்களுக்குப் பின்பு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.

Similar News