தமிழ்நாடு
கைதான ஜிம் மாஸ்டர் நரசிம்மன்

பேஸ்புக் மூலம் பழகி 15 வயது மாணவியை 4 மாநிலங்களுக்கு கடத்தி சென்று தாயாக்கிய ஜிம் மாஸ்டர்

Published On 2022-01-16 08:48 GMT   |   Update On 2022-01-16 08:48 GMT
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மாணவியிடம் பழகி ஒரு குழந்தைக்கு தாயாக்கி விட்டு 5 மாநிலங்களுக்கு சென்று அலைக்கழித்து வந்த ஜிம் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம்  கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 28). ஜிம் மாஸ்டர். இவருக்கு 2  மனைவிகள். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் நரசிம்மனை விட்டு பிரிந்து சென்று விட்டனர். 

இந்த நிலையில் தருமபுரி பகுதியை  சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவியுடன் நரசிம்மன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகினார்.  கடந்த 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5&ந் தேதி, பெங்களூருவில் இருந்து நரசிம்மன் மோட்டார் சைக்கிளில் தருமபுரிக்கு வந்தார். பின்னர் மாணவியை தனியாக சந்தித்து பேசி , கடத்தி சென்று விட்டார்.

இதற்கிடையே வௌ¤யே சென்ற மகள் வீட்டுக்கு திரும்ப வராததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை. இதையடுத்து மகள் மாய மானது குறித்து போலீசில் புகார் செய்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.   தொடர்ந்து போலீ சாரின் விசாரணை மந்தமாக நடந்து வந்ததால் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில்  ஆட்கொ ணர்வு மனு தாக்கல் செய்தனர்.  இதையடுத்து மாயமான மாணவியை மீட்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நரசிம்மனின் செல்போன் நம்பரை வைத்து சிக்னல் மூலம் கண் காணித்தனர். இதில் நரசிம்மன், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பெங்களுர், சென்னை, கேரளா, விசாகப்பட்டனம் என்ற பல்வேறு ஊர்களுக்கு மாணவியை அவர் அழைத்து சென்று வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து நரசிம்மனை பிடிக்க போலீசார் அதிரடியாக வலை விரித்தனர். தெலுங்கானா மாநிலம் எசங்காரெட்டி மாவட்டம் ஸ்னாப்பூர் என்ற பகுதியில் நரசிம்மன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நரசிம்மனை மடக்கி பிடித்தனர்.  அவருடன் இருந்த மாணவியை மீட்டனர். அப்போது மாணவியின் கைகளில் 8 மாத ஆண் குழந்தை இருந்தது.

விசாரணையில் நரசிம்மன் சென்னையில் மாணவியுடன் குடும்பம் நடத்தியபோது மாணவி கர்ப்பமானதும், 8 மாதத்துக்கு சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நரசிம்மனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  மாணவியை தருமபுரி கோர்ட்டில் ஆஜர் படுத் தினர்.   
Tags:    

Similar News