தமிழ்நாடு
கோப்புப்படம்

கோவளம் பள்ளியில் தங்கி படித்த பிளஸ்-1 மாணவி கர்ப்பம்: யார் காரணம்? என தெரியாமல் பெற்றோர் தவிப்பு

Published On 2022-01-10 06:22 GMT   |   Update On 2022-01-10 06:22 GMT
திருவண்ணாமலை மகளிர் போலீசார் விரைவில் கோவளம் பள்ளி விடுதிக்கு வந்து நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:

சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி படித்து வந்தார். 6-ம் வகுப்பில் இருந்து தொடர்ந்து விடுதியிலேயே அவர் தங்கி படிப்பை தொடர்ந்தார்.

தற்போது 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு போன் செய்து பேசி உள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் எனவே என்னை கோவளம் வந்து அழைத்து செல்லுங்கள் எனவும் கூறினார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் கோவளம் விடுதிக்கு தங்கள் மகளை அழைத்து வரச்சென்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்று பெற்றோர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதுபற்றி திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

மாணவியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக மாணவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உண்டு உறைவிட பள்ளியில் படித்தபோது அங்கு யாருடனாவது மாணவி பழகி அதன் மூலமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பம் ஆனாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மகள் கர்ப்பமாகி இருக்கும் நிலையில் அதற்கு காரணம் யார் என தெரியாமல் பெற்றோர் தவித்து வருகிறார்கள். போலீசாரும் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மாணவி தங்கியிருந்த பள்ளி விடுதி மாமல்லபுரம் மகளிர் போலீஸ் எல்லைக்குள் வருகிறது. திருவண்ணாமலை மகளிர் போலீசார் விரைவில் கோவளம் பள்ளி விடுதிக்கு வந்து நேரில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News