தமிழ்நாடு செய்திகள்
முள்படுக்கையில் படுத்து அருள் வாக்கு சொல்லும் மூதாட்டி

முள்படுக்கை மீது படுத்து அருள் வாக்கு சொன்ன பாட்டி - பக்தர்கள் பரவசம்

Published On 2022-01-03 00:45 IST   |   Update On 2022-01-03 00:45:00 IST
கோவில் மண்டல பூஜையையொட்டி முள்படுக்கை மீது படுத்து அருள் வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை :

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல். இங்குள்ள பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில்  45வது மண்டல பூஜை நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையொட்டி கோயில் முன்பு முள்படுக்கை ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது.  வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் அந்த கோவிலின் நிர்வாகியான நாகராணி அம்மையார் திடீரென ஆவேசமாக நடனமாடியபடி முள்படுக்கை இருந்த பகுதிக்கு வந்தார். உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் அந்த மூதாட்டியை முள்படுக்கை மீது நிற்க வைத்தனர்.

இதையடுதது சாமி வந்து ஆடிய நாகராணி அம்மையார் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொன்னார். பின்னர் முள்படுக்கையில் படுத்தபடி இருந்த அவரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர்.

Similar News