தமிழ்நாடு செய்திகள்
மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகள் பயன்பாடற்ற நிலையில் கிடக்கும் காட்சி

நுகர்பொருள் வாணிப கிடங்கில் பயன்பாடற்ற நிலையில் துருப்பிடித்து கிடக்கும் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகள்

Published On 2022-01-01 11:05 IST   |   Update On 2022-01-01 11:05:00 IST
பயனாளிகளுக்கு முறையாக வழங்காமல் கிரைண்டர் மற்றும் பேன்களை சேமித்து வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா கிரைண்டர் மற்றும் பேன் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 82 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு மீதமிருந்த கிரைண்டர் மற்றும் பேன்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட அம்மா கிரைண்டர், மின் விசிறி பெட்டி பெட்டியாக கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்து தற்போது துருப்பிடித்து கிடக்கின்றன. ஏழை, எளிய குடும்ப அட்டைதாரர்களுக்கு பயன்படும் வகையில் உள்ள கிரைண்டர் மிக்சி, பேன் இவைகளை வழங்காத முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

மேலும் இதனால் பயனாளிகளுக்கு முறையாக வழங்காமல் கிரைண்டர் மற்றும் பேன்களை சேமித்து வைத்த மற்றும் மக்களின் வரிப்பணம் வீணாக காரணமாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிப கிடங்கில் உபயோக மற்றும் கிடக்கும் அரசின் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பயனாளிகளுக்கு வழங்கியது போக எஞ்சியுள்ள பொருட்கள் குறித்து முறையாக அரசுக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.


Similar News