தமிழ்நாடு செய்திகள்
மானாமதுரை பகுதியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
பொங்கல் பண்டிகையையொட்டி சிறிய பொங்கல் பானை முதல் பெரிய வகை பானை வரை செய்து உலர்த்தும் பணி மானாமதுரை பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தயாராகும் மண்பாண்ட பொருள்களை தமிழகம் முழுவதும் விரும்பி வாங்கி வருகின்றனர். இங்கு ஆண்டு முழுவதும் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 2 மாதங்களில் தொடர்மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழில் முடங்கியது. தற்போது மழைபொழிவு இல்லாமல் மிதமான வெயில் அடிப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சிறிய பொங்கல் பானை முதல் பெரிய வகை பானை வரை செய்து உலர்த்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் விதவிதமாக மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர்.
மண்பானை தவிர கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு பூச்செடிகள் வளர்ப்பதற்கு பூந்தொட்டிகள், ஜாடி மற்றும் மண் அடுப்புகள், கோவில் பொங்கல் திருவிழாவிற்கு அக்கினி சட்டிகள், ஆயிரம் கண் பானைகள், கிளியான் சட்டிகள், மண் விளக்குகளையும் தயாரித்து உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 50 முதல் ரூ. 200 ரூபாய் வரை மண்பானைகள் கிடைக்கிறது.
தமிழர் பாரம்பரியம் காக்கும் வகையில் அரசு இலவசமாக வழங்கும் பொங்கல் பரிசு தொகுப் புகளுடன் மண் பானையும், மண் அடுப்பும் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கினால் மண்பாண்ட தொழில் சிறப்படையும் என தொழிலாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.