தமிழ்நாடு செய்திகள்
15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பெரிய குளத்தின் மதகு உடைந்தது
விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் பெரியகுளம் சுமார் மூன்று மீட்டர் நீளமும், 15 மீட்டர் சுற்றளவும் கொண்ட மிகப்பெரிய குளமாகும்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்துள்ளது. குறிப்பாக விராலிமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் பெய்த கனமழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது.
இதில் புதுக்கோட்டை அருகேயுள்ள மாவட்டத்தின் முக்கிய நீர்வள ஆதாரமான கவிநாடு கண்மாய் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் போல் காட்சியளித்துவரும் இதனை காண மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதேபோல் விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் பெரியகுளம் சுமார் மூன்று மீட்டர் நீளமும், 15 மீட்டர் சுற்றளவும் கொண்ட மிகப்பெரிய குளமாகும். இந்த குளமும் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையினால் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு நிரம்பி வழிகிறது.
இந்த குளத்தில் இருந்து அப்பகுதி விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் செல்லும் வகையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய ஆங்கிலேய அரசால் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பின்மை காரணமாக அந்த பெரிய குளத்தின் கரைகள், மதகுகள் உள்ளிட்ட பகுதிகள் தொடர் மழையால் சேதமடைந்து உடையும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக வந்த தகவலை தொடர்ந்து அரசு அதிகாரிகள் அப்பகுதியை சோதனையிட்டு பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனர். மழை காலம் முடிந்தவுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மழையினால் நீர் நிரம்பி உள்ள குளத்திற்கு பல்வேறு கிளை வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நீரை தாக்குப்பிடிக்க முடியாமல் குளத்தின் மதகுகள் இன்று உடைந்தது. இதிலிருந்து ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் அருகிலுள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து வருகிறது.
இதனால் நெல், சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் மதகு உடைப்பை சரிசெய்து விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டால் விளை நிலங்களை தொடர்ந்து அருகிலுள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்து கொள்ளும் அபாயமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.