செய்திகள்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களை படத்தில் காணலாம்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

Published On 2021-11-28 09:58 GMT   |   Update On 2021-11-28 09:58 GMT
குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பல்வேறு விதமான இயற்கை கலந்த மூலிகை மலர்கள் பூத்து வருகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து, ரசித்து செல்கின்றனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்கவும், இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருவார்கள்.

அவர்கள் பூங்காக்களில் உள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களையும், சாலையோரங்களில் பூத்து குலுங்கும் அரிய வகை மலர்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் பல்வேறு விதமான இயற்கை கலந்த மூலிகை மலர்கள் பூத்து வருகிறது. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து, ரசித்து செல்கின்றனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இயற்கை கலந்த கண் கவரும் மலர்களும் பசுமை நிறைந்த புல் தரைகளும், வான் உயர்ந்த மரங்களும் மருத்துவ குணம் கொண்ட செடி கொடிகளும் உள்ளன. இதுதவிர 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க கூடிய குறிஞ்சி மலரும் உள்ளது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குறிஞ்சி மலர் பூத்து குலுங்குகிறது.

இது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. சுற்றுலா பயணிகள் குன்னூர் சிம்ஸ் பூங்கா முழுவதும் உள்ள மலர் செடிகளையும், மூலிகை செடிகளையும் பார்த்து விட்டு, பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலரையும் கண்டு ரசிக்கின்றனர். பூவை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று செல்பி புகைப்படமும், குடும்பத்துடன் நின்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் சென்று வருகிறார்கள்.
Tags:    

Similar News