செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2021-11-17 08:45 GMT   |   Update On 2021-11-17 08:45 GMT
சென்னையில் இன்றும், நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி:


சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.30 அடியை எட்டியுள்ளது (மொத்த உயரம் 24 அடி).

இந்த நிலையில் சென்னையில் இன்றும், நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று 1000 கன அடியாக இருந்த உபரி நீர் திறப்பு இன்று 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஏரிக்கு 405 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் 2934 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது (மொத்த கொள்ளளவு 3,645 மி.கஅடி).

Tags:    

Similar News