செய்திகள்
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.

கோவை குற்றாலம் இன்று மீண்டும் திறப்பு- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2021-09-20 06:56 GMT   |   Update On 2021-09-20 06:56 GMT
பிற மாநிலங்களில் இருந்து கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
கோவை:

கொரோனா 2-ம் அலை காரணமாக போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தலம் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

கடந்த 6-ந் தேதி திறக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகம் காரணமாக மீண்டும் 12-ந் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கூறியதாவது:-

கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணிக்கும் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது.

சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

கோவை குற்றாலத்துக்கு வர விரும்புவோர் HTTPS://COIMBATOREWILDERNESS.COM/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு வருபவர்களை 4 குழுக்களாக தினமும் உள்ளே அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி காலை 9 மணி முதல் 9.30 மணி வரை 150 பேர் அதே போல காலை 10.30 மணி முதல் 11 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை என தலா 150 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News