செய்திகள்
கொரோனா வைரஸ்

சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா

Published On 2021-09-17 09:19 IST   |   Update On 2021-09-17 09:19:00 IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பிளஸ்-2 படிக்கும் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த மாணவியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவியுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் அவர் வசித்த பகுதியில் யாருக்காவது காய்ச்சல், சளி இருக்கிறதா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Similar News