செய்திகள்
கைது

வேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது

Published On 2021-08-16 04:03 GMT   |   Update On 2021-08-16 09:54 GMT
வேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர்:

வேலூரை அடுத்த பொய்கை காலனியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதேபோன்று வேலூரை அடுத்த சத்தியமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் காணவில்லை.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் விஜயகுமார், குணசேகரன் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சென்னை-பெங்களூரு சாலை அப்துல்லாபுரம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள், வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (34), பாபுசேட்டு (26), கஸ்பா மோகன் (21) என்பதும், அந்த மோட்டார் சைக்கிள்கள் விஜயகுமார், குணசேகரனின் திருட்டு போன மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News