செய்திகள்
தர்ப்பணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருவையாறு புஷ்பமண்டப படித்துறை பூட்டியுள்ள காட்சி

ஆடி அமாவாசை- வேதாரண்யம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்

Published On 2021-08-08 05:28 GMT   |   Update On 2021-08-08 05:28 GMT
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறைகளில் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
வேதாரண்யம்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதாரண்யம், கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடலில் இறந்த முதியோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி, பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஆடி அமாவாசைக்கு கடலில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.

இதை முன்னிட்டு காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி சோதனைச்சாவடி அமைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில பக்தர்கள் இன்று காரில் வந்து ஏமாற்றத்துடன் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர். வேதாரண்யம் ஒன்றிய எல்லையான தாணி கொட்டகம், தாமரைபுலம், சங்கத்தலை பாலம் ஆகிய இடங்களில் தடைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் குளிக்க வரவேண்டாம் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.



வழக்கமாக ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதாரண்யத்திற்கு முதல் நாளே வந்து தங்கி கடலில் புனித நீராடிவிட்டு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு வெளியூர் பக்தர்கள் வராததால் கடற்கரை மற்றும் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறைகளிலும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையொட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை புதுஆறு படித்துறைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் பலர் தங்களது வீட்டின் மாடியிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


இதையும் படியுங்கள்...பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்- பயணிகளை மயிரிழையில் காப்பாற்றிய டிரைவர்
Tags:    

Similar News