செய்திகள்
செவிலியர்களுடன் எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 செவிலியர்களை தன் செலவில் நியமித்த எம்எல்ஏ முத்துராஜா

Published On 2021-05-28 17:01 IST   |   Update On 2021-05-28 17:06:00 IST
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை கிடைக்க, புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தனது செலவில் 12 செவிலியர்களை நியமித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்டுக்குகள் வரவில்லை. புதுக்கோட்டையில் தினசரி பாதிப்பு 300-க்கும் அதிகமாக உள்ளது. நேற்றைய அறிக்கையின்படி 385 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 228 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 3,732 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் முத்துராஜா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நபர்கள், எளிதாக சிகிச்சை, பரிசோதன பெறுவதற்காக தனிப்பட்ட முறையில் 3 பேரை உதவி செய்வதற்கான நியமனம் செய்தார். அவர்களுக்கு முத்துராஜா எமஎல்ஏ தனது சொந்த செலவில் சம்பளம் வழங்குகிறார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா நோயாளிகளை பராமரிக்க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா  12 செவிலியர்களை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.10000/ தானே வழங்குதாக அறிவித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து பணி வழங்கினார்.

செவுலியர்களும் அவரது பெற்றோர்களும்  நமது சட்டமன்ற உறுப்பினருக்கு தமது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

சுவேதா, ரூபா தேவி, மரிய புஷ்பம், சீலா ராணி, தீபா, கனிமொழி, பரிமலேஸ்வரி, கிரிஜாலினி, மங்கை திலகம்,  போஸ்வரியா , வித்தியா, 
சந்தியா ஆகியோர் செவிலியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News