செய்திகள்
கொரோனா ஒழிய வேண்டி கண்ணமங்கலத்தில் வீட்டு தீ மூட்டிய காட்சி.

கொரோனா ஒழிய வேண்டி வீட்டு முன்பு தீ மூட்டி, மஞ்சள் நீர் தெளித்து வழிபாடு

Published On 2021-05-14 04:01 GMT   |   Update On 2021-05-14 04:01 GMT
நகர் புறங்களில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது கிராம புறங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை விரட்ட பொதுமக்கள் பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

கொரோனா 2-வது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டினர். மேலும் வீடெங்கும் மஞ்சள் நீர் கரைசல் தெளித்து, வீட்டின் வாசற்படியில் வேப்பிலை கட்டி வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில்:-

படவேடு கிராமத்தில் ஒரு பெண் அருள் வந்து ஆடினார். அப்போது அவர் கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தேங்காய் உடைத்து, தீ மூட்டி, மஞ்சள் நீர் கரைசல் தெளித்து வீட்டின் முன்பு வேப்பிலை தோரணம் கட்டவேண்டும் என்றார்.

இதனால் நாங்கள் வீடுகள் முன்பு நெருப்பு மூட்டி, மஞ்சள்நீர் கரைத்து வழிபட்டோம் என்றனர்.

கொரோனா ஒழிய வேண்டி ஆம்பூரில் நேற்று முன்தினம் வீட்டு முன்பு பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

இந்நிலையில் கண்ணமங்கலத்தில் பெண்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி வழிபட்டுள்ளனர்.

நகர் புறங்களில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது கிராம புறங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை விரட்ட பொதுமக்கள் பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News