செய்திகள்
பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டு கடுங்காவல்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பிறந்து 2½ மாதமான பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவை சேர்ந்த 50 வயது நபர் கூலித்தொழில் செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி கடந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த 2½ மாதத்தில், தந்தையே குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து குழந்தையின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தையின் தந்தையை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பிறந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக குழந்தையின் தந்தைக்கு 20 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.