செய்திகள்
கவுண்டன்ய மகாநதி ஆற்றில் இறங்கி அதில் செல்லும் கழிவுநீரை கமல் பார்த்தபோது எடுத்த படம்.

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கழிவுநீர்- கமல்ஹாசன் வருத்தம்

Published On 2021-01-07 15:07 IST   |   Update On 2021-01-07 15:07:00 IST
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதைக்கண்டு மன வேதனை அடைந்தார்.
குடியாத்தம்:

மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று ஆம்பூரில் இருந்து பேச்சை முடித்துக்கொண்டு மாதனூர் வழியாக குடியாத்தம் நேதாஜிசவுக் வந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வழியாக குடியாத்தம் பழைய பஸ் நிலையம் வந்தார்.

இந்த குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் தரைப்பாலம் கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே உள்ளது. குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்யமகாநதி ஓடுகிறது. இந்த வழியாக வந்த நடிகர் கமல்ஹாசன் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதைக்கண்டு காரிலிருந்து இறங்கி பார்த்து மிகவும் மன வேதனை அடைந்தார்.

அப்போது நடிகர் கமல்ஹாசன் நகரின் நடுவே ஓடும் ஒரு ஆற்றில் கழிவுநீரும் குப்பைகளும் இருப்பதை மனதை இறுக்கம் அடைய செய்வதாக கூறினார்.




Similar News