செய்திகள்
கோவில் குளம் நிரம்பியுள்ளதை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை- 25 கோவில் குளங்கள் நிரம்பியது

Published On 2020-12-05 11:01 IST   |   Update On 2020-12-05 11:01:00 IST
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நெல்லிக்குப்பம் பூலோகநாதர், குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன், வடலூர் சத்தியஞானசபை, சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் உள்பட 25 கோவில்களில் உள்ள குளங்கள் தற்போது முழுவதுமாக நிரம்பி உள்ளன.
கடலூர்:

கடலூர் மாவட்டம் முழுவதும் நிவர் புயல் காரணமாக ஏற்கனவே கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

தற்போது உருவான புரெவி புயலால் கடந்த 3 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. ஒரே நாளில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள கோவில் குளங்கள் நிரம்பி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களான பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாதசுவாமி, புதுப்பாளையம் ராஜகோபாலன்சுவாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர், விருத்தகிரீஸ்வரர், புதுப்பேட்டை காசிவிசுவநாதர் உள்பட 85 கோவில்களில் குளங்கள் உள்ளன.

அதேபோல் நெல்லிக்குப்பம் பூலோகநாதர், குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன், வடலூர் சத்தியஞானசபை, சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் உள்பட 25 கோவில்களில் உள்ள குளங்கள் தற்போது முழுவதுமாக நிரம்பி உள்ளன.

மீதம் உள்ள 60 கோவில் குளங்கள் பகுதியளவு நிரம்பி உள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News