செய்திகள்
சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.

சிதம்பரத்தில் 2-வது நாளாக மழை: 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Published On 2020-12-05 10:43 IST   |   Update On 2020-12-05 10:43:00 IST
சிதம்பரத்தில் நேற்று இரவும் 2-வது நாளாக விடிய விடிய கனமழை கொட்டியது. ஒரேநாளில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சிதம்பரம்:

வங்க கடலில் உருவான புரெவி புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது.

குறிப்பாக கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரே நாளில் 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. கனமழை காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள சிவகங்கை குளம் 43 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.

கனமழையால் சிதம்பரம் நகர் பகுதியில் மட்டும் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் தவித்தனர். நேற்று இரவும் 2-வது நாளாக சிதம்பரம் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டியது.

ஒரேநாளில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் மழை தூறி கொண்டே உள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

Similar News