செய்திகள்
நடிகர் ராதாரவி

பாஜக என்ற என்ஜின் இல்லையென்றால் அதிமுக என்ற ரெயில் நகராது - நடிகர் ராதாரவி

Published On 2020-11-17 15:28 IST   |   Update On 2020-11-17 15:28:00 IST
பாரதிய ஜனதா கட்சி என்ற என்ஜின் இல்லையென்றால் அதிமுக என்ற ரெயில் நகராது என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
சிக்கல்:

நாகை மாவட்டம் சிக்கல் பனைமேடு பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் பக்கிரிசாமியின் 52-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சிக்கல் பனைமேடு கிராமத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வை சேர்ந்தவரும், நடிகருமான ராதாரவி கலந்து கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர்களுக்கு ஓட்டுரிமை இல்லையா? நாங்கள்(நடிகர்கள்) எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வேல் யாத்திரை நடத்தும் பா.ஜ.க.வினரை முழுமையாக தமிழக அரசு நடைபயணம் மேற்கொள்ள விடுவதில்லை. தமிழகத்தில், பா.ஜ.க. என்ற எஞ்சின் இல்லையென்றால், அ.தி.மு.க. என்ற ரெயில் நகராது. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் பா.ஜ.க. நிலையாக கால் ஊன்றும். பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சியினரும் கூட்டணி குறித்து குழப்பத்தில் உள்ளனர். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் அது குறித்த கவலை எதுவும் தங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News