செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வேல் யாத்திரை- சட்டம் தன் கடமையை செய்யும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-11-06 08:06 GMT   |   Update On 2020-11-06 08:24 GMT
பாரதிய ஜனதா வேல் யாத்திரை குறித்து ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ரூ.189.33 கோடி மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்

நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ என்றார்.
Tags:    

Similar News