செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு- முதலமைச்சர் விளக்கம்

Published On 2020-11-06 07:34 GMT   |   Update On 2020-11-06 07:34 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
நீலகிரி:

நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.

* நீலகிரியில் கொரோனாவுக்கு இதுவரை 39 பேர் இறந்துள்ளனர்.

* 6,363 காய்ச்சல் முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன.

* நீலகிரியில் ரூ.447 கோடியில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

* நீலகிரி மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக இனி கோவை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.

* மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

* அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள். அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News